Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேனியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து கோலாகல  கொண்டாட்டம்! பன்னீர்செல்வம் வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது!

Edappadi Palaniswami in Theni in support of Kolagala celebration! Panneerselvam house deserted without volunteers!

அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வான பழனிச்சாமிக்கு தேனி மாவட்டத்தில் ஆதரவு தெரிவித்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 61 பொதுக்குழு உறுப்பினர்களில் 24 பேர் நடைபெற்று முடிந்த  பொதுக்குழுவில் பங்கேற்று பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் பன்னீர்செல்வத்தின் நீண்ட கால ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 20 பேர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தும் பொதுக்குழுவிற்கு செல்லவில்லை. 17 பேர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக தொடர்கின்றனர்.இதனையடுத்து  தேனி நேருசிலை, அல்லிநகரம் பஸ் ஸ்டாண்டு, கம்பம் பகுதியில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள பன்னீர் செல்வம் வீடு, கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடின. ஆதரவாளர்கள் பலரும் இரு நாட்களுக்கு முன்பே சென்னை சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version