Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!!

#image_title

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!!

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அக்னி சட்டி ஏந்தி வழிபாடு நடத்தியுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. அந்த படத்தை தொடர்ந்து பருத்திவீரன் படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தார்.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை கஞ்சா கருப்பு சொந்தமாக தயாரித்து நடித்தார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தை அவரால் ஈடுகட்டவே முடியவில்லை. இன்னும் அதில் இருந்து அவரால் மீண்டு வரமுடியவில்லை. இதற்கிடையில் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

சொத்துக்கள் அனைத்தையும் இழந்து தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். தனது குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை கூட கட்ட முடியவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் மிகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் கஞ்சா கருப்பு அக்னிச்சட்டி ஏந்தி வழிபாடு செய்துள்ளார்.

அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தனது குடும்பத்துடன் வந்து அக்னிச்சட்டி எடுத்த கஞ்சா கருப்பு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேண்டுதல் நடத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

Exit mobile version