The Kodanadu case: கொடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மாற்றும் சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2017 ஆம் ஆண்டு உதகை மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி “ஓம் பகதூர்” என்பவர் கொலை செய்யப்பட்டு, அங்கு உள்ள பங்களாவில் முக்கியமான ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சயான் என்பவர் கூடலூர் வாகன சோதனையில் சிக்கினார்.
இந்த சாயன் என்வர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு மர வேலை செய்து கொடுப்பதற்காக அறிமுகம் ஆகி பின்பு நெருக்கமாக பழக்கத்தில் இருந்து வந்து இருக்கிறார். மேலும், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு தற்போது வரை சென்னை நீதிமன்றத்தில் வாதாட பட்டு வருகிறது.
இதுவரை 100க்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் கைதான சயான் அவரை விடுவிக்க போலீசாரிடம் கூறி இருக்கிறார். அது தொடர்பாக விளக்கம் கேட்டு நவம்பர்-5 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் தான் சதீஷன் தீபு தொடர்ந்த மேல்முறையீட்டு செய்து இருந்தார்.
அவரது வழக்கு மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவரது மனுவை விசாரணை செய்த கீழ் நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்து அதிரடி முடிவை எடுத்தது. அதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா வை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.