Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

#image_title

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர்

அதிமுகவில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பன்னிர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் திருச்சியில் வரும் 24-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வரும் முன் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் சிறைக்கு செல்ல வைப்பேன் என முதல்வர் கூறியிருந்தார். தற்போது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கு ஏன் என தெரியவில்லை.
இது குறித்தும் கோடநாடு உள்ளிட்டவை குறித்தும் அண்ணாமலை பேசியிருக்க வேண்டும். பழனிசாமி தலைமையில், நான்காண்டு செய்த ஊழல் போன்று, உலகத்தில் எங்கும் ஊழல் நடந்தது இல்லை. அதனால் அவரை சிறைக்கு அனுப்பும் வரை அண்ணாமலை போராட வேண்டும்.
பழனிசாமி சிறைக்கு செல்லும் நாள் எண்ணப்பட்டு வருகிறது. அதன் பிரதிபலிப்பாக தான் சத்தமாக பேசி அண்ணாமலையை அடக்கப்பார்க்கிறார். பழனிசாமி கூட்டத்தினர் மீது 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் புகார் உள்ளது.
இவை விரைவில் வெளியிடப்படும். பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் நடக்கும் மாநாட்டுக்கு பழனிசாமி, சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி உள்பட சிலரை தவிர்த்து மற்ற யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அவர் கூறினார்.
Exit mobile version