திமுகவில் சேர்ந்தார் எடப்பாடிபழனிசாமி! கலைகட்டும் திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை! 

0
131

தமிழகத்தில் மிக பிரபலமாக உள்ள இரு கட்சிகள் திமுகவும் அதிமுகவும் தான். இதில் திமுக சார்பில் ‘எல்லாரும் நம்முடன்’ என்ற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மொபைல் எண்ணை கொடுத்து OTP பெற்று ஆன்லைன் மூலம் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக முடியும்.

முதல் மூன்று நாட்களிலேயே ஒரு லட்சத்தையும் தாண்டி உறுப்பினர்கள் சேர்ந்ததால் திமுக பெருமையில் கொக்கரித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு எளிமையாக திமுகவில் உறுப்பினராகலாம் என்பதை அறிந்த மக்கள் பலரும் இதில் இதில் சேர்ந்தனர். தற்போது இதுவே உல்டாவாக மாறியுள்ளது.

எல்லாரும் நம்முடன் செயலி வெளிவந்த முதல் நாளிலேயே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திமுகவில் சேர்ந்ததாக அவருடைய உறுப்பினர் அட்டை வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. மேலும் திமுகவில் நீக்கப்பட்டவர் ஆன   முகஅழகிரிக்கும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கியது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் புது புது சர்ச்சையை கிளப்பிய இச்செயலி திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவில் இணைந்ததாக அவருக்கும் ஒரு உறுப்பினர் அட்டையை ய வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுகவின் இந்த செயலி மூலம் உயிரோடு இல்லாதவர், வெளி நாட்டைச் சேர்ந்தவர், முக்கிய பிரபலங்கள், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் போன்ற எவர் வேணாலும் திமுகவில் உறுப்பினர் அடையாள அட்டையை பெற முடியும் என்ற குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி  திமுகவின் எதிர்க்கட்சியினருக்கு ஒரு ருசிகரமான தகவலாக மாறியுள்ளது.