Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

சீனாவில் இருந்து வெளியேறி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம். சி சம்பத் தெரிவித்திருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூபாய் 3 கோடி மதிப்பிலான புதிதாக கட்டப்பட்டு இருக்கும் ஹோஸ்டியா அலுவலகத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி சம்பத் குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக ஓசூரில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வலிமை பெற்று இருக்கின்றது ஓசூரில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் காரணத்தால் ஓசூர் முதன்மை தொழில் நகரமாக மாறி இருக்கின்றது.

இந்தநிலையில் ஓசூர் மற்றும் குருபரப்பள்ளி சூளகிரியில் இன்னொரு சிப்காட் நிறுவனம் தொடங்கப்பட இருக்கும் நிலையில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மூலமாக கொரோனா எதிர் வலி காரணமாக சீனாவில் இருந்து வெளியேறிய தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றது இதில் டெல் நோக்கியா மற்றும் ஆட்டோமொபைல் கனரக வாகன உற்பத்தி என்று பல தொழில் நிறுவனங்கள் கொண்டுவரப்படும் இதன் காரணமாக உலக அளவில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 இடங்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

சென்ற 2019ஆம் வருடம் நடந்த க்ளோபல் முதலீட்டு மாநாடு மூலமாக ரூபாய் 3 லட்சம் கோடி மதிப்பில் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றன 304 தொழில்நிறுவனங்கள் 24 சதவீதம் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன மீதம் இருக்கின்ற நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது இதுவரை 82 சதவீதம் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது இந்த தொற்று காலங்களில் 55 தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது 40 ஆயிரத்து 304 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருக்கிறார்கள்74 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிதரப்பட்டு இருக்கின்றது. கொரோனா காலத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Exit mobile version