Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! இன்று அறிவிக்கப்படும் முக்கிய முடிவு!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது இரு தினங்களில் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்படும் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் இருக்கின்ற பள்ளிகளில் நேற்று முந்தினம் இணையதளம் மூலமாக கருத்து கேட்பு நடத்தப்பட்டது.அதன்படி அறுபது சதவீத பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

நேற்று முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி மூலமாக ஆலோசனையை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version