Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிகள் திறப்பு! தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு இருக்கிறது. அதோடு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நோய்த்தொற்று பரப்பு அதிகரித்து வருவதால் இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில், 2021 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு இன்று முதல் ஆரம்பம் ஆவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்திருப்பதாவது, முழு ஊரடங்கு முடிவடைந்த பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் மற்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் மாவட்ட அளவிலான கல்வி இயக்குனருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version