Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய அதிரடி சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பின்னர் சென்ற ஒன்றாம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து மாணவர்கள் நோய்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் மாவட்ட கண்காணிப்பாளர் அளவிலான காவல்துறை அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் உளவியல் நிபுணர் போன்றோர் அடங்கிய ஒரு குழுவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கின்ற அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல், போன்ற பணிகளை வேகமாக செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளை பாதுகாப்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அந்த சுற்றறிக்கையில் தெரிவித்து இருக்கிறது,

Exit mobile version