தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!

0
112

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை விதித்துள்ளது.இந்நிலையில் பல தனியார் பள்ளி நிறுவனங்கள் இணையவழியிலும்,பெற்றோர்களை நேரில் வரவழைத்தும், மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு,புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கின்றது.

தற்போது வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எந்த விதமான அறிவிப்பும் வராத நிலையில், தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்துவது மிகவும் தவறான ஒன்றாகும் இதனால் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களும் தனியார் பள்ளிகளில் சேர மறைமுகமாக தூண்டுதல் நடத்தப்படுவதாகவும்,இது மிகவும் குற்றமான செயல் என்றும்,நோய்தொற்று தடுப்பு காலத்தில் அரசு அனுமதி பெறாமல் பள்ளிகள்சேர்க்கையை நடத்திவரும் தனியார் பள்ளிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து புகார் அளித்ததன் அடிப்படையில்
நோய் பரவல் சூழலில் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துபள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அதில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்துவித பள்ளிகளும் நேரடியாகவோ அல்லது இணையவழியாகவோ மாணவர்கள் சேர்க்கைகான எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,இது குறித்து எச்சரிக்கை அறிவுறுத்தல்களை பள்ளிகளுக்கு,முதன்மை மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.