தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு! மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

0
118

பள்ளிகள் திறப்பதை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து இன்று முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. அனுமதி வழங்கினாலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

பள்ளிகள் வாரத்தில் ஆறு தினங்களும் செயல்படும் வகுப்பறைகளில் இருபது மாணவர்கள் மட்டுமே அமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் எல்லோரும் நோய் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.. பள்ளிகள் திறந்த உடனேயே பாடம் நடத்தப்படாது, மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தும் நிறத்திலும் பழைய பாடங்களை நினைவில் நிறுத்தும் வகையிலும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு முதல் 45 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் அதற்கான புத்தகமும் வெளியிடப்பட்டு உள்ளது.

மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் இடையே ஒரு சிறிய பயம் இருந்தாலும் இதுவரையில் யாரும் வெளிப்படையாக அதனை காட்டிக்கொள்ளவில்லை. இதனை மனதில் வைத்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

அதேபோல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்த வழக்கு ஒன்று தொடரப்பட்டது. சமயத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த படமாட்டார்கள். இணையதள வகுப்புகளும் மேற்கொள்ளப்படும் இதன் மூலம் அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிப்பதற்காக மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக 37 மாவட்ட அதிகாரிகளை பள்ளிகல்வி துறை நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திறக்கப்படுகிறதா? வகுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? மாணவர்களின் வருகை எப்படி இருக்கிறது ?போன்ற விஷயங்களை கண்காணித்து பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த அதிகாரிகள் அறிக்கை அனுப்புவார்கள்.