Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவ-மாணவியர் மீது தொடரும் பாலியல் குற்றங்கள்!!கல்வித்துறை கையில் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Education Department has provided toll free numbers to ensure the safety of school students

Education Department has provided toll free numbers to ensure the safety of school students

Education department:பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டணம் இல்லா தொலைபேசி எண்களை கொடுத்துள்ளது கல்வித்துறை.

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் மீது பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்துள்ள இச்சம்பவங்கள் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு இன்றி உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒரு புதிய கட்டுப்பாடு ஒன்றை வெளியீடு இருக்கிறது பள்ளி கல்வித்துறை.அதாவது  பள்ளி மாணவ மாணவியர்கள் மீதான குற்ற நடவடிக்கைகளை தடுக்க முதற்கட்டமாக பாட புத்தகங்களின் பின்புறம் 14417, 1098  கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும், அது தொடர்பு கொள்வதன் மூலம் மாணவ மாணவியர்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றிய தகவலை  தெரிவிக்கலாம்.

மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு “(SSAC) Student safeguarding advisory committee  கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாதம் ஒரு முறை மாணவர்களை நேரடியாக சந்தித்து தங்களுக்கு பாலியல் ரீதியாக ஏதாவது தொந்தரவு இருக்கிறதா  என்பது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும்.

மேலும்  NSS NCC, Scout & Guide. JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு  மாணவர்கள் செல்லும் பெற்றோர்களிடம் எழுத்து பூர்வமான கடிதம் வாங்க வேண்டும். மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். மேலும் 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியரும்,10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியரும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் போது இருக்க வேண்டும். என்ற புதிய நடவடிக்கையை எடுத்து இருக்கிறது பள்ளி கல்வித்துறை.

Exit mobile version