கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கோலாகல கொண்டாட்டம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!
காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழக மாநில முதலமைச்சராக இருத்துள்ளர். இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை செய்து வந்தார். அதன் பின் இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதனையடுத்து இவர் கொண்டு வந்த மத்திய உணவு திட்டம் இன்று வரை தமிழக அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.
ஜூலை 15 ஆம் தேதி முன்னாள் முதலவர் காமராஜர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் இவர் பிறந்த நாளை தமிழகத்தில் சிறப்பாக கொண்டப்படுக்கிறது. இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
இதனையொட்டி பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஒரு அறிவிப்பை அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில் கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் இவர் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் கொண்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று அனைத்து பள்ளிகளிலும் அவர் படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே இன்று அனைத்து பள்ளிகளும் இயக்கும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்து. இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள் இந்த கொண்டாட்டம் முடித்து விட்டு மதியம் பள்ளி விடுமுறை என்று அறிவித்துள்ளது.