Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு!! பாதுகாப்பு படையில் “கான்ஸ்டபிள்” வேலைவாய்ப்பு!!

educational-qualification-10th-class-constable-employment-in-defense-force

educational-qualification-10th-class-constable-employment-in-defense-force

உங்களில் பலருக்கு பாதுகாப்பு படையில் பணி புரிய வேண்டுமென்ற கனவு இருக்கும்.உங்களை கனவை நனவாக்கும் வகையில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்தோ-திபெத் எல்லை காவல் படை

பணி:

*Constable

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 545 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் அரசு அல்லது அரசு அங்கீகரிப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு குறித்த விவரத்தை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதிய விவரம்:

கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு,உடற் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பக்கட்டணம்:

SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

இதர வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 06 கடைசி தேதியாகும்.

Exit mobile version