Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போஸ்ட் ஆபிஸில் ரூ.19900 சம்பளத்தில் வேலை ரெடி! கடைசி நாள் செப்டம்பர் 15!

#image_title

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போஸ்ட் ஆபிஸில் ரூ.19900 சம்பளத்தில் வேலை ரெடி! கடைசி நாள் செப்டம்பர் 15!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.மொத்தம் 28 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

பணி: Staff Car Driver (Ordinary Grade)

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கக்கூடியவராக இருக்க வேண்டும்).இப்பணிக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 56 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு தபால் முறையில் அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க 15-09-2023 கடைசி தேதி ஆகும்.

Exit mobile version