பொதுவாக இந்த நைட்ரஸ் ஆக்சைடு மருந்து மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர்களில் அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த மருந்து சிறிதளவு கொடுக்கப்படுகிறது.இது சுவாசித்தால் சிரிப்பு உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நாம் ஒரு பத்து நிமிடத்திற்கு வேறு எந்த உணர்வும் இன்றி சிரித்துக் கொண்டிருப்போமாம்.இந்த மருந்தை பிரான்சில் இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்துவதால் அங்கு இந்த மருந்தை தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இந்த சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு பலூன்களில் நிரப்பப்படுவதோடு பார்ட்டிகளில் ( party) பயன்படுத்தப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் நைட்ரஸ் ஆக்சைடை போதைக்கு அதிகம் பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் வெளிவந்துள்ளன.
இதனால் நைட்ரஸ் ஆக்சைடு வயது வராதவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் அந்த வாயு ஏராளமான பக்கவிளைவுகளை உடலில் ஏற்படுத்த கூடும் என்பதால் தேசிய சுகாதார அமைப்பு நைட்ரஸ் ஆக்சைடு பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நாட்டில் இதற்கான ஆய்வுகள் தொடங்கியுள்ளது.