EGG FRUIT BENEFITS: முட்டைக்கு இணையான சத்துக்கள் கொண்ட இந்த ஒரு மஞ்சள் பழம் பற்றி தெரியுமா?
உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள்,பழங்கள் உண்பது அவசியமாகும்.பழங்கள் என்றால் ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா,மாம்பழம் என்பது தான் நம் நினைவிற்கு வரும்.ஆனால் நம் ஊரில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பெயர் தெரியாத பழங்கள் நிறைய இருக்கிறது.இவ்வாறு அதிக சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாக முட்டை பழம் இருக்கிறது.
இந்த பழம் முட்டை வடிவில் மஞ்சள் கரு போன்ற சதைப்பற்று கொண்டிருப்பதால் தான் இது முட்டை பழம்(EGG FRUIT) என்று அழைக்கப்படுகிறது.முட்டை பழத்தில் மெக்னீசியம்,கால்சியம்,ஜிங்க்,இரும்பு,பாஸ்பரஸ்,வைட்டமின்கள் என்று கோழி முட்டைக்கு இணையான சத்துக்களை கொண்டிருப்பதால் சைவப் பிரியர்களுக்கு இந்த பழம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
முட்டை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு மளமளவென அதிகரிக்கும்.
செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் முட்டை பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வரலாம்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க இப்பழம் உதவுகிறது.
சளி,காய்ச்சல் இருப்பவர்கள் இந்த பழத்தை அரைத்து சாப்பிட்டு வரலாம்.கண் தொடர்பான பாதிப்பு நீங்க,கண் பார்வை தெளிவு பெற முட்டை பழத்தை சாப்பிட்டு வரலாம்.
முட்டை பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க,இரத்த சோகை நோயை குணமாக்க உதவுகிறது.முட்டை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது முற்றிலும் தடுக்கப்படும்.உடல் தசை வலிமை பெற,உடல் எடை கட்டுக்குள் இருக்க முட்டை பழம் சாப்பிடலாம்.