Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள முட்டை மட்டும் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க.. நல்ல தீர்வு கிடைக்கும்!!

#image_title

முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள முட்டை மட்டும் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க.. நல்ல தீர்வு கிடைக்கும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும். அதற்கு தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி பாருங்கள் முடி மிகவும் பளபளப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*முட்டை – 2

*எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*வினிகர் – 2 தேக்கரண்டி

*தூயத் தேன் – சிறிதளவு
செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கி கொள்ளவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

அதனை தொடர்ந்து 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் சிறிதளவு தூயத் தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றி கொள்ளவும். இதை கூந்தல் முழுக்க தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு நன்கு அலசி கொள்ளவும்.

நாம் உபயோகிக்கும் முட்டை ஒரு நல்ல ஹேர் கண்டிஷனராக செயல்படும் தன்மை கொண்டது.
அதேபோல் எலுமிச்சை சாறு தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது. தேன் முடிகளுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. ஆலிவ் ஆயில் தலைமுடியை மென்மையாக மாற்றுவதோடு நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளர்க்க உதவுகிறது.

Exit mobile version