Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்!

#image_title

தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் முக்கிய பங்கை வைக்கிறது கறிவேப்பிலை.இவை மணத்திற்காக மட்டும் சேர்க்கக் கூடிய ஒரு இலை அல்ல.அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கொண்டிருக்கிறது என்பது தான் இதன் சிறப்பு.இந்த கறிவேப்பிலையில் நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது.

கருவேப்பிலையால் உடலுக்கு ஏற்படும் எட்டு நன்மைகள்:

1.இரத்த சோகையை குறைக்கும்

தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சை பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

2.சர்க்கரை நோயை விரட்டும்

தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டுவந்தோம் என்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக இருக்கும்.

3.கெட்ட கொழுப்பை குறைக்கும்

தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி,தொப்பை குறையும்.

4.இதயத்தைப் பாதுகாக்கும்

இயற்கையாகவே கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கருவேப்பிலையில் அதிகளவு உள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து,நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

5.செரிமான பிரச்னையை போக்கும்

தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்தை உறிஞ்சி செரிமான பிரச்சனையை சீராக்கும்.

6.சளி தொல்லையை நீக்கும்

கருவேப்பிலையை காய வைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலை,மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.

8.முடி வளர்ச்சிக்கு உதவும்

தினமும் 15 கருவேப்பிலையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்னை சரியாவதோடு,முடி அடர்த்தியாக வளரும்.இந்த கருவேப்பிலை நரைத்த முடியை கருமையாக மாற்றும்.

8.கல்லீரலைப் பாதுகாக்க உதவும்

கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தோம் என்றால் அதில் உள்ள வைட்டமின் A மற்றும் C கல்லீரலில் தேங்கி கிடக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறி அவற்றை பாதுகாக்க வைக்க உதவுகிறது.

Exit mobile version