Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எட்டு வழிசாலையானது சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல : தமிழக முதல்வர் விளக்கம்

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டமானது சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே அல்ல என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

இன்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை-க்கு சென்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார். சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்தை சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அமைக்கப்படவில்லை என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாக தான் செல்கிறது என்று கூறினார்.

அத்தோடு இத்திட்டமானது மத்திய அரசின் திட்டம் என்றும் குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டுமென்றால் நல்லதொரு உள்கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும், உழவர்களுக்கான உதவித் தொகையை திட்டத்தில் மோசடி குறித்த கேள்விக்கு, உதவித்தொகை திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்திருக்கும் முறைகேடு குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கப்படுவதாக கூறப்படும் குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றது என்றும் தமிழகத்தில் நடைபெறும் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை அரசு ஒருபோதும் மறக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Exit mobile version