நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!..
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தில்லை மற்றும் அரியானாவிலுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆல் மாறாட்டம் முறைகேடு அரங்கேறியது. இந்த தகவல் சிபிஐக்கு ரகசியமாக கிடைத்துள்ளது.
இந்த முறைகேடு காரணமாக உண்மையான மாணவர்களுக்கு பதிலாக பணத்துக்காக தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் எட்டு பேரை கைது செய்தனர்.இந்த தேர்வில் ஆல்மாராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பங்கேற்பதற்காக மார்ஃபிங் தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை மாற்றி அமைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த கும்பலை சேர்ந்தவர்கள் உண்மையான மாணவர்களின் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச் சொற்களை சேகரித்தும் அவர்கள் விரும்பிய தேர்வு மையங்களை பெற முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் வேறு சில போலி நபர்கள் ஈடுபட்டு உள்ளாரா என்று சிபிஐ அதிகாரிகள் அதி தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.