Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

8-ம் வகுப்பு மாணவியை
10-ம்வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில்,தனியார் பள்ளி ஒன்றில் ராகேஷ் மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதனால் பணத்தை பல்வேறு வழியில் ஜாலியாக செலவழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் உல்லாசத்திற்கு விரும்பிய இந்த இரண்டு மாணவர்களும்,இந்த இருவரின் தோழியாக பழகி வந்த அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் வீட்டில் பாடம் கற்பித்த தருவதாக கூறியுள்ளனர்.இதனை நம்பி ராகேஷ் மற்றும் அர்ஜுனுடன் இருசக்கர வாகனத்தில் அச்சிறுமி சென்றுள்ளார்.

ஆனால் அச்சிறுவர்கள் அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் அவர்களின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று இருவரும் மாறி மாறி அந்த சிறுமியை பாலியல்
வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டி வீட்டிற்கு கூட்டிச் சென்று விட்டுள்ளனர்.

ஆனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த வன்கொடுமையை அவளது பெற்றோரிடம் கூறியுள்ளார்.அதனைக் கேட்டு பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அந்த இரண்டு மாணவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் அந்த 2 மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Exit mobile version