ரஜினி உடன் கூட்டணியா எல். முருகனின் பதிலால் பரபரப்பு!

0
179

பாரத் பந்த் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார் பஜகவின் மாநில தலைவர் எல் முருகன்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முருகன் பாஜக சார்பாக விவசாயிகளின் நண்பன் எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு எல்லா கிராம மக்களுக்கு வேளான்சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் தமிழ்நாட்டில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் இந்த சட்டத்தின்படி விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்ய இயலும் என தெரிவித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது இதற்கு ஆதரவு கொடுத்த திமுக இப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது 2014ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் தேர்தல் அறிக்கையில் திமுக வெளியிட்டிருந்த தகவல்தான் இப்போது வேளாண் சட்டங்களில் இடம்பெற்றிருக்கின்றது இந்த சட்டங்கள் மூலமாக விவசாயிகளுக்கு பல பலன்கள் வந்து சேரும் தமிழ்நாட்டில் பாரத் பந்த் தோல்வி அடைந்துவிட்டது அதோடு கடையை மூடக் கோரி திமுகவினர் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எல்.முருகன்.

அதோடு ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்கப்படுமா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு கட்சியின் தலைமை தான் அந்த விஷயத்தை முடிவு செய்யும் எனவும் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.