திமுகவை பற்றி எல் முருகன் கூறிய தகவலால்! வெடித்தது மாபெரும் சர்ச்சை!

0
142

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருக்கும் ,ஒரு புத்தகத்தை நீக்கியதற்கு திமுக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றது. தீவிரவாதத்தை திமுக ஆதரிக்கிறதா என தமிழக பாஜக வின் தலைவர் கேள்வியெழுப்பி இருக்கின்றார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய walking with comrades” என்கின்ற புத்தகம் சார்ந்த பாடப் பகுதிகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் அந்த பாடப்புத்தகத்தை நீக்கியதற்கு, திமுக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அருந்ததி ராய் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்றதாகும்.

அந்த சமயத்தில் திமுக காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடைய முக்கிய அங்கமாக இருந்து வந்தது.

அந்த சமயத்தில் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த திமுக இப்போது எதற்காக எதிர்க்கிறது.

அந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சராக, இருந்த ப. சிதம்பரம் தலைமையிலேயே இந்திய துணை ராணுவப் படைகள் மத்திய இந்தியப் பகுதிகளில் அந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு எதிராக ஆபரேஷன்களை செய்தனர் என்று தெரிவித்தார்.

அவர்களுக்கு உண்மையான அக்கறை என்பது இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே தடுத்திருக்கலாமே எனவும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் விமர்சனம் செய்து இருக்கின்றார்.