Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்த தடை வந்தாலும்! எங்கள நிறுத்த முடியாது!

எவ்வளவுதான் இடையூறு வந்தாலும் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை மீண்டும் தொடரும் என்று தமிழக பாஜகவின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார்.

சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முருகன் ,எதிர்வரும் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும்.

என்ன தடை வந்தாலும், வேல் யாத்திரையை டிசம்பர் மாதம் ஆறாம் தேதி திருச்செந்தூரில் முடித்து வைப்போம் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள இயலாது கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு, எங்கள் கொள்கைக்கு ஏற்றது போல நாங்கள் செயல்படுவோம்.

வீட்டில் இருப்பவர்களை எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று, அரசு கைது செய்வதை ஏற்றுக்கொள்ள இயலாது.

முன்கள பணியாளர்களை பாராட்டுவதற்கு மத்திய அரசு திட்டங்களை பற்றி பேசுவதே இந்த வேல்யாத்திரை ஏன் தமிழக அரசு எங்களுடைய யாத்திரையை தடுத்து நிறுத்துகிறது என்று தெரியவில்லை.

எமெர்ஜென்சியையே பார்த்தவர்கள் தான் நாங்கள் அனைத்து தடைகளையும் எதிர்கொள்வோம் என்றார் முருகன்.

Exit mobile version