Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி! காரணம் இதுதான்!

சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது. அதாவது தமிழ்நாட்டில் எப்படியாவது அந்த கட்சியை நிலை நிறுத்திவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அந்த கட்சியின் தலைமை செயல்பட்டு வருகிறது.தமிழக பாஜகவின் தலைவராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோதும் கூட அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது அந்த கட்சியின் தலைமை இருந்தாலும் அப்போது இந்த அளவிற்கு வேகமாக அந்த கட்சி செயல்படவில்லை. ஆனால் தற்சமயம் அந்த கட்சியின் செயல்பாட்டினை கண்டால் இன்னும் 5 வருடங்களில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக பாஜக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதற்கு உதாரணமாக, தமிழக பாஜகவில் தமிழர்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதாவது தற்போது பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் அவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் கட்சியில் இணைந்தார். அவர் தற்சமயம் மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்.அதேபோல தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின்னர் தலைவர் பொறுப்புக்கு வந்த முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கி அழகு பார்த்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வகையில், தற்சமயம் தமிழக பாஜகவின் மூத்த தலைவராக இருந்த இல கணேசன் அவர்களுக்கு மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பு வழங்கி கவுரவித்து இருக்கிறது மத்திய அரசு.இப்படி தமிழக பாஜகவிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து தமிழக பாஜகவின் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி அழகு பார்ப்பது தமிழகத்தின் மீது பாஜக அக்கறையுடன் இருக்கிறது என்பதை வெளி காட்டுவதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version