Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தர்பூசணியில் மோடி, ஜிங்பிங்! அசத்தி காட்டிய தமிழக இளைஞர்! குவியும் பாராட்டுகள்

elanchezhian carved out the images of modi xijinping on a waterlemon

elanchezhian carved out the images of modi xijinping on a waterlemon

சென்னை: தர்பூசணி பழத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் உருவத்தை செதுக்கி அனைவரும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் தமிழக இளைஞர் ஒருவர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்.  வயது 31. சமையல் தொழிற்நுட்பத்தில் பட்டம் பெற்று, கல்லூரிகளில் பழங்கள் செதுக்கும் கலையை கற்பித்து வருகிறார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் உருவங்களை செதுக்கியவர். தற்போது, தர்பூசணியில் மோடி, ஜின்பிங் படத்தை வரைந்து அசத்தி உள்ளார்.

அந்த பழத்தில், ஜின்பிங் மற்றும் பிரதமா் மோடி ஆகியோரின் உருவத்தை செதுக்கி வெல்கம் டு இந்தியா என ஆங்கிலத்திலும், சீன மொழி எழுத்துகளிலும் செதுக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சரியான சைஸ், எடை கொண்ட பழத்திற்காக சில நாட்கள் காத்திருந்தேன். தர்பூசணி பழத்தில் இருநாட்டு தலைவர்களின் உருவத்தை செதுக்கி இருக்கிறேன்.

இந்த கலை சீனாவில் மிக பிரபலம். ஏனோ என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்திருக்கிறேன். இந்த கலையை அனைவருக்கும் கற்று தர ஆசை என்றார் இளஞ்செழியன். அவரின் இந்த திறமை, ஆர்வத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version