Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறுதி கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய முக்கிய கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.அதேபோல எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம் பிடித்து இருக்கிறார்கள்.டிடிவி தினகரன் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்து இருக்கிறது.

கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்திருக்கின்றன. இந்த தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதேபோல அதிமுக சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஸ்டாலின் கமல்ஹாசன் சீமான் டிடிவி தினகரன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள்.இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இன்னும்.இரு தினங்களே இருக்கின்ற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் நாளை இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த நிலையில், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரும் என்று கால நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Exit mobile version