Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

#image_title

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை. சூடுபிடிக்கும் தேர்தல் களம்.
கர்நாடக தேர்தலை முன்னிட்டு நேற்றுவரை நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து கட்சித் தலைவர்கள் பலரும் அவர்களின் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் சில பிரபல நடிகர்களும் சில கட்சிகளுக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி அதாவது மே10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலத்தை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடம் கடும் போட்டி நிலவி வருகின்றது. பிரதமர் மோடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக பாஜக கட்சியை ஆதரித்து ரோட் ஷோ திட்டம் மூலமாக பெங்களூரில் பிரச்சாரம் செய்தார். மேலும் நடிகர் கிச்சா சுதீப், நடிகர் பிரம்மானந்தா ஆகியோர் பாஜககட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் நடிகர் சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மற்றும் பல கட்சி தலைவர்கள் அவர்களகன் கட்சிகளை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்யவுள்ளனர். தங்கள் கட்சி கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தெரு தெருவாக சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
Exit mobile version