நிரந்தர சின்னம் தொடர்பாக சர்ச்சையை கிளப்பிய நபர்! என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்!

0
112

அனைத்து தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்களை இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கின்றார்.

தேர்தலில் அரசியல் கட்சிகள் நிரந்தரமான சின்னம் வழங்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் பிரபாகரன் தாக்கல் செய்த இந்த வழக்கில் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தரமான சின்னங்களை ஒதுக்குகிறது.

ஆனால் இருந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதேபோல நிரந்தரமான சின்னங்களை ஒதுக்குவதற்கு வகை செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக சின்னங்களின் பட்டியல் போன்றவற்றை வெளியிட்டு அவற்றை ஒதுக்கும் அதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு அறிவுறுத்தி இருக்கிறது என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்திருக்கின்றார். அதில் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்களிடம் குழப்பத்தை உண்டாக்கும் வரை வாக்குப்பதிவு நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும், சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்திருக்கின்றார்.

சின்னங்களை பிரபலபடுத்த அரசியல் கட்சிகள் அரசியல் நிதியையும், அரசு இயந்திரத்தையும், பயன்படுத்தினால் சின்னங்களை வாபஸ் பெறுவது, தேர்தலை ரத்து செய்வது, இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது கிடையாது ஆகிய காரணத்தால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரியின் மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் உள்ளிட்டோரின் அமர்வில் விசாரணைக்கு வந்த சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு பதில் அளிப்பதற்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் 3 வாரத்திற்குள் ஒத்திவைத்து இருக்கிறார்கள்.