சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

நோய் தொற்று காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது.

ஆனாலும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் தகுந்த நோய்தொற்று வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்று முடிந்து இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில்தான் மேற்குவங்காளத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 30 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இமாச்சலப் பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா நகர், ஹவேலி, போன்ற பகுதிகளுக்கு நாடாளுமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது, அதேபோல ஆந்திரப்பிரதேசம், பீஹார், ஹரியானா, அசாம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இருக்கின்ற 30 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு எதிர்வரும் 3ஆம் தேதி ஆரம்பித்து எட்டாம் தேதி வரையில் நடைபெறும் அதேபோல வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது மற்றும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி 30 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் மாதம் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

Exit mobile version