Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு !!

வரும் நவம்பர் 9-ஆம் தேதி 11 மாநிலங்களவை தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 நபர்கள் மற்றும் உத்தரகண்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பி-யின் பதவிக்காலனாது, வரும் நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பதவிகாலம் ம முடிவடைவதற்கு முன்பாகவே தேர்வு நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேலும் சந்திரபால் சிங் யாதவ், அருண் சிங், ஜாவேத் அலிகான், பி.எல்.புனியா, ரவிபி காஷ் வர்மா, ராஜாராம், வீர் சிங், ராம்கோபால்யதவ் உள்ளிட்டோரின் எம்எல்ஏ பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.

மேலும்  இந்த தேர்தல் நடத்துவது குறித்தும் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . அதில் தேர்தல் வாக்கு பதிவானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும் என  அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 27- ஆம் தேதி என உள்ள நிலையில், 28-ஆம் தேதியே வேட்புமனுக்களை ஆராயப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வேட்புமனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியாக நவம்பர் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version