வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

0
174

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தம் செய்து கொள்ளலாம், தேர்தல் ஆணையம் இதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இணையத்தளம் மற்றும் சிறப்பு செயலி மூலம் செப்டம்பர் 1 ஆம் முதல் 30 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரையில் தாங்கள் மாற்றம் செய்ய வேண்டிய பெயர், முகவரி, புகைப்படம், பிறந்தநாள் தேதி போன்றவற்றை வாக்காளர்களே திருத்தம் செய்யலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது இந்திய தேர்தல் ஆணையம் EVP எனப்படும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் வாக்காளர்களே வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை செப்டம்பர் 1 முதல் 30 வரை மாதம் முழுவதும் செய்யலாம், வாக்காளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

திருத்தங்களை மேற்கொள்ள வாக்காளர் அடையாள எண்ணை NVSP என்ற இணையதளத்தில் அல்லது சிறப்பு செயலியில் செலுத்தி, ‌தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ் போர்ட் புத்தகம், நிரந்தர வங்கி கணக்கு புத்தகம், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் போன்றவற்றில் எதாவது ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் பிறகு திருத்தங்களை மேற்கொள்ளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து ஆய்வு செய்து திருத்தங்களை ஏற்று கொள்வார்கள்.

கணிணி அல்லாதவர்கள் இ- சேவை மையங்கள் மூலமாகவும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்