Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது அதோடு புதுவை கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அன்றே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

 

மேலும் அஸ்ஸாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பலகட்டமாக நடந்து வருகிறது இதில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது அதன்படி இதுவரையில் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்து இருக்கின்றன அந்த வகையில் ஐந்தாம் கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் நாளை நடைபெற இருக்கிறது.

 

வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரையில் தமிழ்நாடு கேரளா புதுவை அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சேர்த்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது இதில் தமிழகத்தை பொறுத்தவரையில் வாக்குப்பதிவு நடைபெற்று சுமார் ஒரு மாதகாலம் வாக்கு எண்ணிக்கை காத்திருப்பதில் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் தொடர்பாக இண்று மாலை மூன்று மணியளவில் இந்திய தேர்தல் துணை ஆணையர் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்யவிருக்கிறார்.

Exit mobile version