Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

6மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிறைய பல நவம்பர் மாதம் 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வமான அரசு அறிக்கை அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பிஹார், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version