Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி விவரங்கள்!!

#image_title

தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி விவரங்கள்!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் முழு மூச்சாக இறங்கி வாக்குகளை சேகரிக்க துவங்கியுள்ளனர். மோடியின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள பட்சத்தில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே தேர்தல் தேதி குறித்த விவரங்கள் அடங்கிய அட்டவணை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அல்லது நாளை வெளியிடும் என்று பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ் குமார், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தேர்தல் தேதியினை வெளியிடவுள்ளனர். இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடவேண்டியவை.

நடக்கவுள்ள இந்த தேர்தலையொட்டி தங்களது வேட்பாளர்களை தேசிய அரசியல் கட்சிகள் அறிவித்து வருகிறார்கள். இதனிடையே, 82 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியும், 267 வேட்பாளர்களை பாஜக கட்சியினர் 2 கட்டங்களாக இதுவரை தெரிவித்துள்ளனர். அந்தந்த மாநில கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இத்தேர்தலில் மம்தா பேனர்ஜி மேற்குவங்கத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version