Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வருக்கு கிடைத்த ஆய்வு ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இருக்கின்ற நிலையில், சுமார் ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர் மே மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில்,ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் எக்ஸிட் போல் என்று சொல்லக்கூடிய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.தற்சமயம் ஆளுங்கட்சியாக இருந்து வரும் அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வேட்பாளராக இருந்து வரும் சுனில் அதிமுகவிற்கு எக்சைட் போல் ஆய்வுகளை செய்து வருகிறார்.

அதாவது தேர்தல் முடிவுற்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி முதல்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பி இருக்கிறது சுனில் குழு வாக்குப்பதிவு சதவீதம் முதல் முறை வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் உள்பட பல காரணிகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தேர்தலுக்குப்பின்னர் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், தொகுதியின் பொறுப்பாளர்கள் என கட்சியின் பல பொறுப்புகளில் இருப்பவர்கள் உடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், உரையாடி இருக்கிறார். தேர்தலுக்குப் பின்னர் ஒரு சில தினங்கள் வரை மட்டுமல்ல தொடர்ந்து பல தரப்பினரிடமிருந்தும் புதுப்புது விவரங்களை கேட்டறிந்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் வியூகம் வகுப்பார்கள் செயல்பட்டு வரும் சுனில் இடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. சுனில் குழுவினர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கொடுத்த ரிப்போர்ட்டின் படி அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் கிடைப்பது 100% உறுதி என்று சொல்லப்படுகிறது. அதோடு 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் 1000 முதல் 2000 வரை தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தொகுதிகளில் மீண்டும் மீண்டும் செய்த ஆய்வில் யார் வென்றாலும் மயிரிழை அளவிற்குத்தான் வெற்றி இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு கிடைத்த ரிப்போர்ட்களின் படி அதனடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது

Exit mobile version