திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

0
118
#image_title

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இன்று(செப்டம்பர்24) அதிகாலை மூன்று மணியளவில் மின்சார பேருந்தை எச்.வி.சி காட்டேஜ் அருகே நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் தேநீர் அருந்த சென்றார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் பேருந்தை திருடிச் சென்றார்.

தேநீர் அருந்தி விட்டு திரும்பி வந்து பார்த்த பேருந்து ஓட்டுனருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காட்டேஜ் அருகே நிறுத்தி வைத்திருந்த பேருந்து அங்கு இல்லாததால் அந்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பேருந்து காணாமல் போனது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கெண்டு சோதனை செய்ததில் மின்சார பேருந்து 90 கி.மீ தொலைவில் நாயுடுப் பேட்டையில் பேருந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

மின்சார பேருந்தை திருடிச் சென்ற மர்மநபர் மின்சார பேருந்தை 100 கி.மீ ஓட்டி வந்துள்ளார். மேலும் மின்சார பேருந்தில் சார்ஜ் இல்லாததால் அந்த மர்மநபர் பேருந்தை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை திருடிச் சென்ற மர்மநபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்தை மர்மநபர் திருடிச் சென்றது திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.