மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!!  

0
247
Electric trains canceled - Metro will run at 7 minute intervals tomorrow!!

மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!!

சென்னையில் தாம்பரம்-கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அதில், நாளை(மார்ச்.,17) சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரையிலும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் செல்லும் மின்சார ரயில்களான மொத்தம் 44 ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது இது முதல்முறை அல்ல.கடந்த சில வாரங்களாகவே மின்சார ரயில்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வாரம் 6வது முறையாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு மின்சார ரயில்கள் அவ்வப்போது ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்நிலையில், பயணிகளின் இந்த அசௌகரியத்தினை சரிசெய்ய நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை மெட்ரோ ரயில்கள் அனைத்தும் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.