Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு !

Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு !

நேரடி பண பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இது எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.அதன் படி வாட்ஸ் அப் மூலமும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. தற்போது சாமானியர்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி கொண்டுள்ளனர்.  அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

நாம் G PAY, PHONE PE, PAYTM மற்றும்  QR CODE மூலமாக தேவையான இடங்களில் பண பரிவர்த்தனை செய்கிறோம். இதே போல் வாட்ஸ் அப் செயலிலும் பண பரிவர்த்தனை செய்யலாம் என்ற முறை வாட்ஸ் அப் செயலி அறிமுகப்படுத்தியது.

மின் கட்டணத்தை செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று செலுத்தி வந்தனர். தற்போது ஆன்லைன் மூலமாக மக்கள் மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.

இப்போது வாட்ஸ் அப் செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மத்திய பிரதேசத்தின் மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் மூலமாக மின் கட்டணத்தை செலுத்தும் முறையை முதற்கட்டமாக மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 07552551222  என்ற வாட்ஸ் அப் எண்ணை வெளிட்டுள்ளது. இந்த எண்ணிற்கு முதலில் ஒரு செய்தி அனுப்பி, பிறகு அதில் மின்சார கட்டணத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும்.  பிறகு பணம் செலுத்தவும்.  பணம் செலுத்தியதற்கான உறுதி செய்தியையும் இது அளிக்கிறது.

 

Exit mobile version