மீண்டும் தமிழகத்தில் மின்தடை!! பராமரிப்பு பணிஅதிர்ச்சியில் மக்கள்!!
தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு பணிகளின் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனையடுத்து 3 மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடலூர் கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மின்தடை என்று தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் துணை முன் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிதம்பரம் பகுதியில் அம்மாபேட்டை, சி.முட்லூர், வக்காரமாரி, மணலூர், வல்லம்படுகை, கிள்ளை, கனகரபட்டு, தில்லை நாயகபுரம், சிவபுரி மரியப்பாநகர், பெராம்பட்டு, கீரப்பாளையம், எண்ணாநகரம், கண்ணங்குடி, வயலூர் மற்றும் மேலமூங்கிலடி பகுதியில் மின்தடை என்று அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எல்.வலையபட்டி மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளது. அதனையடுத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நத்தம் பகுதியில் ன்.புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, கசம்பட்டி, புதுகோட்டை, பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, வத்திப்பட்டி , புளியூர்நத்தம், அரசப்பிள்ளை போன்ற இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
அதனையடுத்து கன்னியாகுமாரி மாவட்டம் கண்ணநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று மின்தடை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.