Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின்கட்டண இணையதள முகவரி மாற்றம்…!! தமிழக அரசு!

தமிழகத்தில் பொதுமக்கள் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்திவந்த இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகம் முழுவதும் மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக இருந்து வந்த இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட இணையதள முகவரிகள்:

www.tangedco.org

www.tantransco.org

www.tnbltd.org

இந்த இணையதள முகவரியை மின்கட்டணம் செலுத்துவது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய இணையதள வசதியை வரும் 28ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக வசதி காரணமாக மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக இருந்து வந்த இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version