காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

0
192
#image_title

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!

காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார சப்ளையும் மத்திய தொகுப்பு மின்சார சப்ளையும் திடீரென்று குறைந்துள்ளதால் மீன் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை 17000 மெகாவாட் அளவாக உள்ளது. இந்த 17000 மெகாவாட் மின்சாரத்தை பூர்த்தி செய்வதற்கு தினமும் மத்திய மின்சார தொகுப்பில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது. அதே போல் மின் வாரிய அனல்மின் நிலையங்களில் இருந்து 3800 மெகாவாட் மின்சாரமும், நீர் மின் நிலையங்களில் இருந்து 300 மெகாவாட் மின்சாரமும், எரிவாயு மின் நிலையங்களில் இருந்து 200 மெகாவட் மின்சாரமும் கிடைக்கின்றது.

மேலும் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து 4000 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது. மீதமுள்ள மின்சாரம் குறுகிய, நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் மற்றும் உடனடி மின்சார சந்தைகளில் இருந்தும் பெறப்படுகிறது.

சீசன் துவங்கி இருப்பதால் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில்  இருந்து தினமும் 2000 மெகாவாட்க்கும் மேல் மின்சாரம் தினமும் கிடைத்து வந்தது.

இந்த மின்சாரத்தை முழுவதும் பயன்படுத்த அனல் மின் நிலையங்களில் உள்ள ஒவ்வொரு அலகிலும் இடைவெளி விட்டு பராமரிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக கடந்த மே 25ம் தேதி முதல் 20 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காற்றாலைகள் மூலமாக தினமும் 1000 மெகாவாட்க்கு குறைவாகவும் மத்திய தொகுப்பில் இருந்து தினசரி 4000 மெகாவாட்க்கு குறைவாகவும் மின்சாரம் கிடைத்து வருவதால் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதில் மின்வாரியத்திற்கு  தற்பொழுது நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் “காற்றாலைகளில் தினமும் கூடுதலாக மின்சாரம் கிடைத்து வந்ததால் அனல் மின் உற்பத்தி 3000 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. மேலும் மின்சார சந்தையில் இருந்து மின்சாரக் கொள்முதலும் குறைக்கப்பட்டது. தற்பொழுது திடீரென்று காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும், மத்திதய அரசிடம் இருந்து கிடைக்கும் மின்சாரமும் குறைந்துள்ளது.

இதனால் மின் தேவை அதிகரித்துள்ளது. 1500 மெகாவாட் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி 3500 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் முடிவடைந்துள்ளதால் 300 மெகாவாட் வரை மின் தேவை குறையும். மின் தேவைக்கு ஏற்ப மின்சார சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்படும்” என்று கூறினார்.