தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டர் பதிவு!
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சென்னையில் நேற்று செய்தியாளர்களும் பேசினார் அப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து கூறினார். மேலும் தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சார தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் வீட்டின் நுகர்வோர் நிலை கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூபாய் 20 முதல் 50 வரை செலுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. பேரவை தேர்தலையொட்டி இதற்கான வாக்குறுதி திமுக அழுத்தி இருந்தது இந்த அறிவிப்பால் 2 கோடி வீட்டு முன்னோர்கள் பயன்பெறுவர் குடிசை விவசாயி, கைத்தறி ,விசைத்தறி, மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் எனவும் கூறினார். ஒவ்வொரு யூனிட்டுக்களுக்கும் ஒவ்வொரு விதமான விலையை நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு குறித்து இபிஎஸ் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். அதில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரி உயர்வு போன்ற சுமைகளை சுமத்தப்பட்டுள்ளது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.