Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின் கட்டண உயர்வு! மாநில அரசுக்கு செலவுகள் அதிகரிப்பு!

தமிழக மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரையில் இலவசமாகவும் 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், இசைத்தறி, கைத்தறி, பொது வழிபாட்டு தளம், சில கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை தமிழக அரசு வருடம் தோறும் மானியமாக வழங்குகிறது.

இதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றவாறு வரவேண்டிய மானிய அறிக்கையை மின்வாரியம் தயாரித்து ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பும். அதனை மதிப்பீடு செய்து ஆணையம் ஒப்புதல் வழங்கும். அந்த மானிய தொகையை அரசு விடுவிக்கும்.

மின்வாரிய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக இலவசம் மற்றும் மானிய மின்சாரத்திற்கு அரசு வழங்கும் மானிய செலவினமும் அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் வீடுகளுக்கு 5,284 கோடி ரூபாய் விவசாயம், 5927 கோடி குடிசை வீடுகள், 288 கோடி வழிபாட்டுத் தலங்கள், 15 கோடி விசைத்தறி 431 கோடி கைத்தறி, 6 கோடி கூட்டுறவு சங்கம் 55 கோடி ரூபாய் என 12008 கோடி ரூபாய் மானியம் வழங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவே 2021 22 ஆம் நிதியாண்டில் மானியமாக 8,932 கோடி தான் வழங்கப்பட்டது. தற்சமயம் மின்கட்டண உயர்வு காரணமாக அரசுக்கு 3626 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் மானிய செலவு உண்டாகியுள்ளது.

Exit mobile version