மன அழுத்தத்தை போக்க யானைக்கு ஸ்விம்மிங் பூலா!

0
158
Elephant swimming pool to relieve stress!

மன அழுத்தத்தை போக்க யானைக்கு ஸ்விம்மிங் பூலா!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பார்வதி என்ற யானை உள்ளது. இதற்கு வயது 26. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய தொடர்ந்து மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள்.

இந்நிலையில் யானைக்கு இரண்டாவது கண்ணிலும் கண்புரை பரவத் தொடங்கியது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிது.மேலும் இச்சிகிச்சைக்கு சிறப்பு வாய்ந்த தாய்லாந்து டாக்டரை அழைக்க முடிவு செய்தனர்.இச்சிகிச்சையின் மூலம் பார்வதி தொடர்ந்து முன்னேற்றம் அடைவதாக கண்டறியப்பட்டது.

இதற்காக தாய்லாந்து மருத்துவர்கள் இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் வழியாக பார்வதி யானையை பார்வையிட்டு எம்முறையில் சிகிச்சை வழங்க வேண்டும் என ஆலோசனை செய்து வந்தனர். எனவே யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசிரியர் நிக்ரோன் தோங்தீப் தலைமையிலான ஏழு பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார்கள்.

பின்னர் அவர்கள் பார்வதியை நேரில் பார்வையிட்டு அதற்கு எந்த அளவுக்கு கண்புரை பாதிப்பு உள்ளது என்றும், யானைக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆய்வில் ஈடுபட்டனர்.இந்நிலையில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாய்லாந்து மருத்துவ குழுவிடம் தங்களது கோவில் யானையான பார்வதியின் கண் பாதிப்புகளை விரைவில் குணப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் .மேலும் பார்வதியின் மன அழுத்தத்தை போக்க 23 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அளவில் குளியல் தொட்டி ஒன்று கட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த ஆய்வில் மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் கோவில் துணை கமிஷனர் அருணாச்சலம் உள்ளிட்ட பல பேர் கலந்து கொண்டார்கள். விரைவில் பார்வதிக்கு குளியல் தொட்டி அமைக்க பல ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.