Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அண்ண நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ!

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அன்ன நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ!

ஆட்கள் யாரும் இல்லாத சாலையில் யானை ஒன்று அசைந்த நடந்து சென்ற வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் போக்குவரத்து, அத்தியாவசியமற்ற நிறுவனங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் தடை செய்யப்பட்டு அத்தியாவசியம் உள்ள மருந்தகம், மளிகைகடை, பெட்ரோல் பங்க், வங்கிகள், ஏடிஎம்-கள், காய்கறி சந்தை போன்ற இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகின்றன. இதனால் சாலைகளில் எந்த நடமாட்டமும் இல்லாமல் அநாதையாக உள்ளன.

இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் யானை ஒன்று யாருமே இல்லாத சாலையில் அமைதியாக நடந்து போகும் காட்சி பதிவாகியுள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ஒரு யானை அமைதியாக ரோட்டில் நடந்து வந்து சிறிது தூரத்தில் கடைக்கு அருகேயுள்ள பகுதியில் சுற்றுமுற்றும் பார்க்கிறது. பின்னர் மீண்டும் எந்த சத்தமும் இல்லாமல் நடந்து செல்கிறது.

பதிவில் ஊரடங்கு உத்தரவு சரியாக நடக்கிறதா என்று யானை சோதனை செய்வதாக மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். வயநாட்டில் யானைகள் உலாவுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இந்த யானை நடக்கின்ற தொனி ஒரு அரசு அதிகாரியின் உடல்மொழியை நினைவு கூறுவதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version