யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு!!!ஒய்வெடுக்க வழியில்லாமல் சுற்றித்திரியும் யானைகள்!!!

0
110
#image_title

யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு!!!ஒய்வெடுக்க வழியில்லாமல் சுற்றித்திரியும் யானைகள்!!!

வால்பாறை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்குள்ள எஸ்டேட் பொது மக்கள் பயந்துள்ளனர்.
காரணம் யாதெனில் யானைகளின் வழித்தடங்கள் மற்றும் அவற்றின் வழித்தடங்கல் எஸ்டேட் என்ற பெயரிலும் விடுதிகள் கட்டவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யானைகள் மனிதர்கள் வாழும் இடத்திற்கு வந்து பொதுமக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வால்பாறையின் மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியே நூற்றுகணக்கான யானைகள் தங்கியுள்ளன.

அதுமட்டுமன்றி தேயிலை எஸ்டேட்டுகளில் பகல் நேரங்களில் யானைகள் வருவதால் தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது.இரவு நேரங்களில் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க அறிவுறுத்தபடுகிறது.
இதன் காரணமாக காடுகள் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.