உலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அந்த நபர் யாருன்னு தெரியுமா?

0
151

அண்மையில் ப்ளூம்பெர்க் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டது. அதில் சற்று முன்பு கிடைத்த தகவல்களின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் எலான் மஸ்க். இவரது டெஸ்லா கார் பங்குகள் உயர்ந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. இப்பொழுது அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியனிலிருந்து 128 பில்லியனாக உயர்ந்துள்ளது.

ப்ளூம்பெர்க் ஆய்வில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் . எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்ததை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை இயக்குனர் பில்கேட்ஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டொயோட்டோ போன்ற வாகனங்களை விட குறைவான வாகனங்களை டெஸ்லா நிறுவனம் தயாரித்தாலும் உலகத்தின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை இயக்குனரான பில்கேஸ் 2017 ஆம் ஆண்டு வரை முதலிடத்தை பெற்று இருந்தார். அதன்பின் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவரை பின்னுக்கு தள்ளினார்.

பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 127.7 பில்லியனாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. மேலும் பில்கேட்ஸ் அவரது அறக்கட்டளைக்கு தானம் அளித்ததால் அவரது சொத்து மதிப்பு குறைந்து இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை அவர் தானம் அளிக்காமல் இருந்திருந்தால் அவரது சொத்து மதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவரின் சொத்து மதிப்பு 182 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது.