காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!

0
323
#image_title

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!

டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர்மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர்மேலாண்மை அதிகாரிகள் கர்நாடகா தமிழகத்திற்கு 18  நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.இதனை மறுத்த கர்நாடக அரசு  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அணைகளில் நீரில்லை எனவும் கூறி மறுத்து வந்தது.

இந்நிலையில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக கர்நாடகத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது.கர்நாடக அரசிற்கு சுமார் 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது.இதனைதொடர்ந்து தற்போது மேலும் கடையடைப்பு காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

காவிரி தண்ணீரை நம்பியிருக்கும் விவசாயிகளை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி நீர்மேலாண்மை கூட்டம் இன்று(29) நடைபெறுகிறது.இக்கூட்டத்திற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கர்நாடகத்திற்கு தமிழக அரசின் நிலைகுறித்து எடுத்துக்கூறப்படும். காவிரி நீர்வாரிய உத்தரவினை கர்நாடக அரசு ஏற்று செயல்பட வலியுறுத்தப்படும் எனவும் தெரிகிறது.

மேலும் தமிழக அரசின் வாகனங்கள் கர்நாடகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.